நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா? லைவ் சாட்டில் பிரபல நடிகையிடம் கேள்வி கேட்ட இளைஞர்..! நடிகை கூறியதை பாருங்க

Report
507Shares

கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியான படமான குருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். இதைத்தொடர்ந்து, பொராளி அதன் பிறகு நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் ஆகிய படங்களில் நடித்த நிவேதா தாமஸ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில், ரஜினிகாந்தின் மகளாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் பேசியுள்ளார்.

அப்போது, நிவேதா தாமஸிடம்... எப்போது கல்யாணம், ... பற்றி ஒருவார்த்தை சொல்லுங்கள், பாய் பிரெண்ட்ஸ் இருக்கிறார்களா, என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறீர்களா, நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா? என்பது போன்ற கேள்விகள் அதிகளவில் வரதொடங்கியுள்ளன.

இதனால், மிகுந்த ஆத்திரமடைந்த நிவேதா தாமஸ்.. நடிகைகளுக்கு மரியாதை கொடுங்கள். அதற்கு முன்பாக நீங்கள் ஒரு சக மனுஷியிடம் பேசுகிறீர்கள் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள். கொஞ்சம் மரியாதையையுடனும், கண்ணியத்தையுடனும் இருங்கள். மற்றப்படி உங்களின் நேரத்தை எனக்காக செலவழித்தற்காக நன்றி. விரைவில் மீண்டும் சந்திக்கலாம்", என அதிரடியாக பதிலளிதுள்ளார்.

loading...