ஈழத்து தர்ஷனுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்... கமல், ரஜினி பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தினைப் பாருங்க

Report
623Shares

பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளரான களமிறங்கியவர் தான் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன். வெற்றி பெற்று கோப்பையை வாங்காவிட்டாலும், மக்களின் பெரும்பாலான மனங்களை கொள்ளையடித்தவர் என்றே கூறலாம்.

இவரது வெளியேற்றத்தின் போது ரசிகர்கள் கண்ணீர் கூட சிந்தினர். இதனை நினைத்து தர்ஷன் பலமுறை பெருமிதம் கொண்டு கதைத்திருந்தார்.

தர்ஷன் வெளியேறிய பின்பு இறுதி நிகழ்வின் போது கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்னெஷ்னல் தயாரிப்பில் ஒரு படத்தில் தர்ஷனை ஒப்பந்தம் செய்வதாக கமல் அறிவித்திருந்தது மட்டுமின்றி தனது தயாரிப்பு நிறுவனத்தினை பேட்ஜ் ஒன்றினையும் தர்ஷனுக்கு அணுவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ராஜ் கமல் அலுவலகத்தின் புதிய கட்டிடம் மற்றும் இயக்குநர் கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழாவில் பேசிய கமல், 'ராஜ் கமலின் 50 வது படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும், அதில் தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. அந்த அளவிற்கு ராஜ்கமலை நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள் என்று பேசியுள்ளார்.

ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் ஒப்பந்தமாகியுள்ள தர்ஷன் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக பேச்சுகள் எழுந்த நிலையில் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன் பிரபலங்களுடன் எடுத்திருந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது டபுள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளரும், ஒரே இளைஞருமான கலந்துகொண்டதற்கு பெருமிதம் கொள்வதாக தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார்.