முதல்முதலாக குழந்தையுடன் போட்டோ ஷுட்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலம்!

Report
203Shares

கடந்த 2017ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து 'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியும் மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்த நிலையில் அழகான பெண் குழந்தையினை பெற்றெடுத்தார் நிஷா.

தற்போது குழந்தையினை வைத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். SAMAIRA என்று குழந்தைக்கு பெயர் வைத்துள்ளதுடன், முதல் போட்டோ ஷுட்டில் மிக அழகாக தேவதையாக இருக்கும் குழந்தையை புகைப்படத்தில் காணலாம்.

loading...