கவின்- லொஸ்லியா காதல்!.. முதன்முறையாக மனம் திறந்த சேரன்

Report
338Shares

பிக்பாஸ் லொஸ்லியா விவகாரத்தில் தன் ஒரு அப்பாவாக நடந்து கொண்டது குறித்து மனம் திறந்துள்ளார் இயக்குனர் சேரன்.

யதார்த்தமான படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சேரனின் படங்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸில் நடந்து கொண்ட விதம் பற்றி பேட்டியளித்துள்ள சேரன், லொஸ்லியா தன்னுடைய அப்பா குறித்து நிறையவே என்னிடம் பேசியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் கவினை அவர்களுக்கு பிடித்துப்போக, இருவரும் பேச ஆரம்பிக்கிறார்கள், எதிர்காலம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதை பார்த்ததும் ஒரு அப்பாவாக, நான் வருத்தப்பட்டேன், அவர்களது குடும்பத்தினர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை எனக்கிருந்தது.

கவினின் பெற்றோர்கள் குறித்தும் தான் நான் சிந்தித்தேன், இதை கவின் தவறாக புரிந்து கொண்டு நான் ஏதோ டிராமா செய்கிறேன் என நினைத்துவிட்டார்.

பல படங்கள் பிரமாதமாக எடுத்து பெயர் வாங்கிவிட்டேன், இங்கு பெயர் வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என தெரிவித்துள்ளார்.

loading...