நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்கிறாரா? அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள... தீயாய் பரவும் அழகிய புகைப்படம்

Report
302Shares

நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவியை ரசிகர்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

1986 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி சென்னையில் தான் வளர்ந்தார். 1992 ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜ் நடித்த “ரிக்ஷா மாமா ” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். நடிகை ஸ்ரீதேவி தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான “காதல் வைரஸ் ” என்ற படத்தில் கதாநாயாகியாக அறிமுகமானார்.

அதன் பின்னர் நடிகர் ஜீவா நடித்த “தித்திக்குதே “தனுஷ் நடித்த “தேவதையை கண்டேன்” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவிக்கு 2016 ஆம் ஆண்டு ரூபிகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவி தனது மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர்.

அந்த அளவு அவரின் குழந்தை அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்டார். உண்மையில் ஸ்ரீதேவியின் மகளா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

loading...