புகழின் உச்சிக்கு சென்றதால் தலைக்கனத்தில் பேசும் ரயிலில் பிச்சை எடுத்த பாடகி! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி

Report
282Shares

ரயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணுக்கு சமூக வலைதளத்தின் மூலம் சினிமா படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது, மிகப்பிரபலமான ஒருவர் ஆகிவிட்டதால் ராணு மோண்டல் மிகவும் பிஸியாக இருக்கிறார். அவர் போகும் இடங்களில் பலரும், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில், எந்த சமூக வலைதளம் மூலமாக புகழின் உச்சிக்கு ராணு சென்றாரோ, அதே சமூக வலைதளம் மூலமாக தற்போது அவர் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சமீபத்தில் ஷாப்பிங் சென்ற ராணுவை, பெண் ஒருவர் மேலே தொட்டு அழைத்துள்ளார். என்ன இது மேலே கை வைத்துதான் கூப்பிடுவீர்களா? நான் இப்போது பிரபலம்” என்று கூறியுள்ளார். குறித்த காட்சியை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளன.

தற்போது குறித்த சர்ச்சைக்குரிய காட்சியை பார்த்து பலரும் அவரை திட்டி வருகின்றனர்.

9515 total views