விளையாடுவதற்காக படகை துரத்தி வந்த வெள்ளை நிற திமிங்கலம்.. இணையத்தில் வைரலாகும் காட்சி

Report
103Shares

வெள்ளை நிற திமிங்கலம் ஒன்று படகில் செல்பவர்களை விளையாடுவதற்காக துரத்தி செல்லும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில வைரலாக பரவி வருகிறது.

பெலுகா திமிங்கல குட்டி ஒன்றுடன் படகில் செல்லும் சிலர் பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் சிலர் படகில் பனிக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பெலுகா திமிங்கலம் தென்பட்டுள்ளது. இவர்கள் ஒரு பிளாஸ்டிக் பந்தை தூக்கி கடலில் வீச, வேகமாக நீந்தி சென்ற திமிங்கலம் அதை எடுத்து வந்து அவர்களிடமே திரும்ப தருகிறது. தொடர்ந்து எத்தனை முறை பந்தை தூக்கி வீசினாலும் அதை கொண்டு வந்து கொடுத்து கொண்டே இருந்துள்ளது அந்த திமிங்கலம்.

ஆர்க்டிக் துருவத்தில் கடலில் இருக்கும் ஜெமினி கிராஃப்ட் கப்பலில் உள்ள குழுவினர் இந்த வீடியோவை எடுத்ததாக நியூசிலாந்து ஹெரால்ட் தெரிவித்துள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் இதற்கு கருத்துகளை பலர் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் “அந்த திமிங்கலம் பந்தை எடுத்து வந்து விளையாடவில்லை. நீங்கள் கடலில் தூக்கி போடும் குப்பையை எடுத்து வந்து உங்களிடம் கொடுக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பதிவிட்டவருமே இதுபோன்ற கடல் ஜீவன்கள் தொடர்ந்து உயிர்வாழ பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டுமெனெ குறிப்பிட்டுள்ளார்.

loading...