புகழின் உச்சியில் இருந்த நடிகை ராதா என்ன தொழில் செய்றாங்க தெரியுமா?

Report
729Shares

13 வயதில் சினிமாவுக்கு அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா.

தன்னுடைய சுட்டித்தமான நடிப்பாலும், அழகான தோற்றத்தாலும் ஏராளமானவர்களை கிரங்கடித்தவர்.

ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டவருக்கு, கார்த்திகா, துளசி, விக்னேஷ் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

தன்னுடைய விருப்பப்படியே கார்த்திகா, துளசி சினிமாவில் அறிமுகமானாலும், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையாமல் போனது.

கேரளாவில் `Uday Samudra Leisure Beach Hotel & Spa, Uday Suites - The Garden Hotel, Uday Backwater Resort’ என மூன்று Five Star Hotelsகள் இவர்களுக்கு இருக்கிறது.

இதுதவிர சினிமா தியேட்டர், சாய் கிருஷ்ணா பள்ளி மற்றும் சென்னையில் ஸ்டுடியோ ஒன்றும் இருக்கிறதாம்.

மொத்தம் 4000 பணியாளர்கள் பணிபுரிய தொழில் வெற்றிகரமாக சென்றாலும் தங்களுக்கு பின்னர் பொறுப்பை பிள்ளைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே ராதாவின் ஆசையாம்.

இந்நிலையில் அவ்வப்போது ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக தலைகாட்டி வந்தவர், நல்ல கதாபாத்திரம் அமைந்தால் சினிமாவில் நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறாராம்.

loading...