ஜெமினி பட நடிகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் கவலைக்கிடம்.. சோகத்தில் திரையுலகினர்கள்..!

Report
52Shares

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஜெமினி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படம் முழுவதும் விக்ரமிற்கு துணையாக வலது கையாக நடித்த நடிகர் தென்னவன், தற்போது உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி சமூக மருத்துவமனையில் வைரலாக பரவி வருகிறது.

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் சென்னை வந்தார். அதன் பிறகு பாரதி ராஜா இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான என் உயிர் தோழன் படத்தில் அறிமுகமானார்.

அந்த படத்திற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்துதான் வேலுச்சாமி என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்த இவர் ஜெமினி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்தார்.

அந்த படத்தின் கதாபாத்திரம் வெற்றியடைய இவருக்கு பல படங்கள் வாய்ப்புகள் குவிந்தன. இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்டை திரைப் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராசாத்தி என்ற தொடரில் நடித்து வருகிறார் தென்னவன்.

இந்நிலையில் தற்போது வெளியான தகவலின்படி நடிகர் தென்னவனுக்கு திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். மூளையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அவரை சென்னை பொத்தேரியிலுள்ள இதனால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் தற்போது தென்னவன் தனது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் , தென்னவனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் சினிமா வட்டாரங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

2502 total views