டிக்டொக் செயலியே கதி என இருந்த மனைவி... கணவர் செய்த கொடூர செயல்..!

Report
57Shares

தெலுங்கானா மநிலத்தில் டிக்டொக் செயலியே கதி என இருந்த மனைவிட்யை கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் தையல் வேலை செய்து வருபவர் பாசகாசிம். இவர் கடந்த 14 வருடத்திற்கு முன்பு ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், திருமணம் ஆனதிலிருந்தே மனைவி அதிக செலவு செய்வதாக சண்டையிட்டு வந்துள்ளார் பாசகாசிம்.

இதுஒருபுறமிருக்க, கடந்த 2 மாதத்திற்கு முன்னர் ஊராட்சி அலுவலகம் ஒன்றில் பாத்திமாவுக்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேலை கிடைத்துள்ளது.

அங்கு வேலையை ஒழுங்காக செய்யாமல் தனது மொபைலில் டிக் டாக் பயன்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டி வந்துள்ளார். குடும்பத்தை ஒழுங்காக கவனிக்காமல் டிக் டாக்கில் வீடியோ போடுவதையே வேலையாக வைத்திருந்த பாத்திமா மீது கோபம் அடைந்தார் கணவர்.

இது குறித்து கடந்த 27ம் தேதி மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.. வாக்குவாதம் முற்றவே சப்பாத்தி கட்டையால் மண்டையை உடைத்துள்ளார்.

இதனால், ஃபாத்திமா சம்பவ இடத்திலேயே இறந்துவிட, அவர் தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆடியுள்ளார். ஆனால் போலீஸ் நடத்திய தீவிர விசாரணையில் பாத்திமாவை கணவர் தான் கொன்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2435 total views