கமல்ஹாசன் பிறந்த தினத்தில் மீராமிதுன் பதிவிட்டுள்ள ட்விட்.. கடுமையாக திட்டும் நெட்டிசன்கள்..!

Report
244Shares

திரையுலக வரலாற்றில் 60 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நடிகர்களாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் இன்று தனது 65 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுயுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த தினம் முன்னிட்டு பல அரசியல்கட்சி தலைவர்களும், நடிகர்கள், நடிகைகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற மொடல் அழகி மீராமிதுன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் ட்விட்டர் வாசிகள் மீரா மிதுனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமே கமல் குறித்து சமீபத்தில் தான் மீரா மிதுன் கழுவி ஊற்றி வந்தார்.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீராமிதுன் அக்னி சிறகுகள் படத்தில் கமிட் ஆகியிருந்தார். ஆனால், பின்னர் அவருக்கு பதிலாக கமலின் மகள் அக்சரா ஹாசன் கமிட் செய்யப்பட்டார். இதனால் கடுப்பான மீரா மிதுன், சினிமா துறையில் பிரபலமான குடும்பம், தங்களுடைய செல்வாக்கின் மூலம் அவருடைய மகளை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதனால் அவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சி இல்லையா? இது தவறான செயல் இல்லையா? கமலை கடுமையாக தாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கமல் குறித்து இப்படி பேசிவிட்டு தற்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள மீராவின் இரட்டை வேஷத்தை ட்விட்டர் வாசிகள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

loading...