கமல்ஹாசனின் பிறந்த நாள் குடும்ப புகைப்படத்தில் இடம் பிடித்த நடிகை.. சர்ச்சையை கிளப்பிய தகவல்..!

Report
690Shares

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் இன்று 65 வது பிறந்தநாளை சொந்த ஊரான பரமக்குடியில், குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். குடும்ப புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் இடம் பிடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையில் தங்களது தாயாருடன் வசித்து வரும் கமல்ஹாசன் மகள்களான ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோர்களும் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த அனைவரும் தற்போது பரமக்குடியில் உள்ளனர். அதேபோல் இயக்குனர் மணிரத்னம் மனைவியும் சாருஹாசன் மகளுமான சுஹாசினியும் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒரே நாளில் சந்திப்பதால் குடும்பத்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், அவரது உறவினர்களும், சொந்தங்களும் ஒன்று கூடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகின.

அதனை கண்ட பலருக்கு ம் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் கமலஹாசனுடன் தொடர்ந்து நடித்து வரும் 42 வயது நடிகையான பூஜாகுமார் தனது தாயாருடன் இந்தப் புகைப்படத்தில் இடம்பிடித்துள்ளார்.

மேலும், கமலஹாசன் குடும்ப புகைப்படத்தில் பூஜா குமார் இடம் பிடித்திருப்பது பெரும் சர்ச்சையை தற்போது கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் பல விமர்சனங்களை அள்ளி வீசுகின்றனர். 4 வதாக இணைந்தாரா? என கலாய்த்து வருகிறார்கள்.

28489 total views