சுவரில் போஸ்டர் ஒட்டிய மாகாபா ஆனந்த்... இன்று புகழின் உச்சியில்

Report
0Shares

பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர்களான டிடி, கோபிநாத், சிவகார்த்திகேயனுக்கு அடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மாகாபா ஆனந்த்.

அவரது தொகுத்து வழங்கும் திறமைக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் கஷ்டப்பட்டாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

சுவர்களில் போஸ்டர் ஒட்டுவது, பாடல் சிடி விற்பனை செய்யும் கடையில் வேலை செய்தது என பல போராட்டங்களை கடந்தே வந்துள்ளார்.

தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு சினிமா காரம் காபி என்ற ஷோ கதவை திறந்துள்ளது.

தனது பன்முக திறமையால் மற்றவர்களுக்கு மிகவும் ஜாலியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் வல்லவரான மாகாபா, சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் வெற்றி பெற்றாலும் பெரிய திரையின் வெற்றிக்கனி இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது!.. விரைவில் அங்கும் இவர் ஜொலிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவல்.

இந்நிலையில் ஏழை மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுக்கு நல்ல ஆலோசகராக மாகாபா பணியாற்றி வருகிறாராம்.

நமக்கு தெரிந்த விஷயத்தை படிக்கும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வேலையை தான் தொடர்ந்து செய்ய இருக்கிறேன் என்றும் பெருமைக் கொள்கிறார்.

loading...