பிரபல தொகுப்பாளினிக்கு கிடைத்த உயரிய விருது!.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் டிடி.. வாழ்த்துமழை பொழியும் ரசிகர்கள்..!

Report
606Shares

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு விஜய் ரிவி தொலைக்காட்சியில் பிரபலமானவர். இந்நிலையில் டிடிக்கு தற்போது “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் தந்து உள்ளார்கள். இதனால் திவ்யதர்ஷினி மிகுந்த சந்தோஷத்தில் பயங்கரமாக துள்ளிக் குதித்து கொண்டாடி வருகிறார்.

சென்னையில் நடைபெறும் பேஷன் ஷோக்களில் மிகவும் பிரபலமானது என்று சொன்னால் D AWARD மற்றும் DAZZLE STYLE ICON AWARD தான். மேலும், இந்த இரண்டும் இணைந்து பிரம்மாண்டமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தியது. இந்த ஃபேஷன் ஷோ பிரபலங்களை கௌரவப்படுத்தும் வகையில் ஏற்படுத்தியது. இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது டிடி இந்த விருதினை வழங்கினார்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுகொண்ட டிடி பேசியதாவது, அனைவருக்குமே ரொம்ப பிடித்த வார்த்தை டார்லிங். அதே போல் எனக்கு டார்லிங் ஆப் தி டெலிவிஷன் என்ற அவார்ட் கிடைத்தது எனக்கு ரொம்ப பெருமையாகவும், மன கிடைத்தது சந்தோசமாகவும் இருக்கிறது.

அதோடு ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான ஸ்டைல் இருக்கும். அதிலும் வயது அதிகமாகும்போது நமக்கு பொறுப்புகள் அதிகமாகின்றன. மேலும், நான் டிவியில் தொகுத்து வழங்கிய ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு விதமான ஆடைகளை அணிந்து வந்துள்ளேன். அதோடு என்னுடைய பேச்சுத் திறமைக்கு மட்டுமல்லாமல் நான் அணியும் ஆடைகளுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பார்கள்.

எனது ஆடைகளுக்கு டிசைன் செய்து கொடுக்கும் டிசைனர்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதில் நான் மிக உறுதியாக இருப்பேன்.

நான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நான் போடும் ஆடைகளின் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன். மேலும்,நான் நிகழ்ச்சிகளில் அணியும் ஆடைகளின் மூலம் மேலும்,நான் உடை டிசைனர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை கிடைக்கும் என்ற நோக்கில் தான் நான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த “எங்கிட்ட மோதாதே” சீசனில் முழுவதும் நான் புடவை அணிந்து தொகுத்து வழங்கினேன்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு உடை செய்த டிசைனர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இவர்களின் படைப்பு வெளிஉலகிற்கு தெரியும் என்ற நோக்கில் தான் நான் செய்தேன். இப்போது அவர்களின் தொழில் மிகவும் சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது என்று கூறினார்.