பிக்பாஸில் தற்கொலைக்கு துணிந்த மதுமிதா தற்போது உச்சக்கட்ட மகிழ்ச்சியில்... காரணம் என்ன தெரியுமா?

Report
1894Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கூறிய கருத்து தான் சரி என்ற வாதத்தினால் ஏற்பட்ட மனஉளைச்சலால் தற்கொலை முயற்சியினை எடுத்து வெளியேறியவர் தான் ஜாங்கிரி மதுமிதா.

வெளியேறிய பின்பு அவர் தனது கையை அறுத்துக்கொண்டதை புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். அதுமட்டுமின்றி பல சர்ச்சைகளையும் சந்தித்து வந்துள்ளார்.

அவ்வாறு தற்கொலை முயற்சி செய்கையில் கஸ்தூரி, சேரன் இருவர் மட்டுமே அவருக்கு ஆறுதலாக இருந்து வந்துள்ளனர். இதனை கமல் முன்பு மேடையிலேயே அவர் கூறினார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்களுடன் நேரத்தினை செலவிட்டு வந்ததை காணொளி வாயிலாக அவதானித்த வந்தோம்.

இந்நிலையில் சேரன் மதுமிதாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தினை கவினை சுட்டிக்காட்டியே இவ்வாறு செய்துள்ளார் என்று கவின் ஆர்மியினர் வறுத்தெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

loading...