பிரபல காமெடி நடிகர் சார்லி கிடைத்த பட்டம்.. குவிந்து வரும் திரையுலகினர்களின் வாழ்த்துக்கள்..!

Report
557Shares

பிரபல காமெடி நடிகரான சார்லி, தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற தலைப்பில் நடிகர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் முனைவர் பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. ஆளுநர் இந்த பட்டத்தை வழங்க உடன் பண்பாடு மற்றும் ஆட்சி மொழி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துணைவேந்தர் கோ.பால சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

59 வயதான நடிகர் சார்லியின் இயற் பெயர் மனோகர். பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக திரைப்படத்திற்காக தனது பெயரை 'சார்லி' என மாற்றிக் கொண்டார்.

ஃப்ரண்ட்ஸ், வெற்றி கொடிகட்டு, காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, தற்போது விவேக்குடன் வெள்ளைப்புக்கள் உள்ளிட்ட பல படங்களில் தனது முத்திரையைப் பதித்தவர் சார்லி.

59 வயதாகும் நடிகர் சார்லி, 1983ஆம் ஆண்டு பொய்க்கால் குதிரை படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் குணச்சிர நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த முனைவர் பட்டம் பெறுவதற்கு முன்னால், 2013ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களில் பங்களிப்பு என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

loading...