திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பிக்பாஸ் காதல் ஜோடி... புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த கவிலியா ஆர்மி

Report
1359Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களின் அமோக வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

அனைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் காதல் தானாகவே துளிர்விடுவதை அவதானித்திருப்போம். ஆனால் அந்த காதல்கள் திருமணத்தில் சென்று முடிவது என்பது கடினமே.

இதுவரை அவ்வாறு பிக்பாஸில் காதலித்து திருமணம் செய்தவர்கள் இல்லை என்று கூறி வந்த நிலையில் கன்னட மொழியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட பிரபல இசை அமைப்பாளர் சந்தன் ஷெட்டிக்கும் அந்த சீசனில் போட்டியாளராக பங்குபெற்ற நிவேதா கவுடாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது மட்டுமின்றி திருமண நிச்சயதார்த்தமும் முடிந்துள்ளது. விரைவில் தங்களது திருமண திகதியை அறிவிப்போம் என்று குறித்த ஜோடிகள் கூறியுள்ளனர்.

கன்னட பிக்பாஸ் ஜோடிகளின் திருமண நிச்சயதார்த்தத்தினை அவதானித்த தமிழ் பிக்பாஸ் ரசிகர்கள் கவின், லொஸ்லியாவை திருமணம் செய்வாரா? என்ற ஏக்கத்தில் காணப்படுகின்றனர்.

loading...