பிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண்! விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை

Report
2086Shares

கவின், லொஸ்லியா விவகாரம் தொடர்பாக அட்வைஸ் செய்து விவேக் வெளியிட்ட பதிவால் மீண்டும் சேரனைத் திட்டி கவிலியா ஆர்மியினர் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரனுக்கு, கவின், லொஸ்லியா விவகாரம் பெரும் தலைவலியாக மாறிவிட்டது.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, லொஸ்லியாவை சேரன் மகளாகக் கருதி வந்தார். இதனால் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டு சேரன் மேலும் சில அறிவுரைகளை கூறினார்.

ஆனால் கவின் மற்றும் லொஸ்லியா ரசிகர்களுக்கு சேரனின் இந்த அறிவுரைகள் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்ட நிலையிலும் இந்த பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. தற்போது, நடிகர் விவேக் சேரனுக்கு இந்த விவகாரம் தொடர்பாக அட்வைஸ் செய்து ஒரு புதிய டிவீட் வெளியிட்டார்.

அதில், " சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி.

ஆகவே விஜய் சொல்வது போல் "இக்னோர் நெகட்டிவிட்டி". அஜீத் சொல்வது போல் " லெட் கோ". நல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். எல்லோருக்கும் அமைதி நிலவட்டும்", என விவேக் குறிப்பிட்டிருந்தார்.

விவேக்கின் இந்த பதிவு முடிந்து போன பிரச்சினையை மீண்டும் கிளப்பிவிடுவது போல் ஆகிவிட்டது. திரும்பவும் சேரனைப் பற்றி கவிலியா ஆர்மியினர் திட்டி பதிவுகள் வெளியிடத் தொடங்கி விட்டனர்.


loading...