மனநிலை பாதிக்கப்பட்டு மீண்டும் பிச்சையெடுக்கும் பிரபல நடிகர்....

Report
1434Shares

காதல் படத்தில் நடித்த தனது கொமடியினை இன்றளவும் ரசிகர்களை மறக்காமல் வைத்திருக்க செய்த பிரபல நடிகர் தற்போது மனநிலை சரியில்லாமல் பிச்சை எடுத்து வருவது தெரியவந்துள்ளது.

நடிகர் பரத், சந்தியா நடித்த படம் காதல். இதில் விருச்சிககாந்த் என்ற வேடத்தில் நடித்தவர் தான் பல்லு பாலு. அவர் நடித்தது ஒரே காட்சி என்றாலும் ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு இன்றளவும் தீனி போட்டு வருகின்றது.

சமீபத்தில் பல்லு பாலுவை பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருந்தது அனைவருக்குமே தெரிந்த விடயமே...

ஆனால் பல்லு பாலு மதுபழக்கத்திற்கு அடிமையானதால் அங்கிருந்து தப்பித்தது மட்டுமின்றி சென்னை வடபழனி அருகே சாலையேரத்தில் படுத்து உறங்கியதையும், மீண்டும் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளதாகவும், அவரது மனநிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பித்த பல்லு பாலு, மீண்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகவே வாழ்ந்து வருகின்றார் என்றும் மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தால் மட்டுமே பல்லு பாலுவிற்கு நல்லது நடக்கும் என்று நண்பர்கள் கூறி வருகின்றனர்.

loading...