கோலங்கள் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீவித்யா.. இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா?

Report
1861Shares

சன் தொலைக்காட்சியில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பபட்ட சீரியல் கோலங்கள்.

இந்த சீரியலில் ஆர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா.

இவர், சீரியல்களில் நடிப்பதற்கு முன்னர், குழந்தை நட்சத்திரமாக, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், என்னவளே, போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சீரியலுக்கு வந்த ஸ்ரீவித்யா, சிவ சக்தி”, “முந்தனை முடிச்சு”, “கோலங்கள்”, “ஆனந்தம்”, “தென்றல்” உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக கோலங்கள் சீரியலில் ஆர்த்தி கதாபாத்திரமும், தென்றல் சீரியலில் சாருலதா வீரராகவன் என்ற கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதைத்தொடர்ந்து, இவர் தனது, உறவினரை திருமணம் செய்துகொண்டு சிறிதுகாலம் நடிப்பதை நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில், குடும்பம், குழந்தை என சென்றுகொண்டிருந்த ஸ்ரீவித்யா மீண்டும் சித்திரம் பேசுதடி என்ற சீரியல் மூலம் ரிஎண்ட்ரி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, சொந்தமாக தொழில் தொடங்கவேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையால் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு வெளிநாடுகளில் ஃபேமஸாக இருக்கும் ‘கிளவுட் கிச்சன்’ எனும் கான்செப்டில் சொந்தமாக தொழில் தொடங்கி, அதை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார் ஸ்ரீவித்யா. சென்னையில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தரும் நிறுவனம் தான் அது.