லவ்வா இது? கருமம் பிடிச்சது.... கவின், லொஸ்லியா காதலை காரி துப்பும் பிரபல நடிகை

Report
793Shares

பிக்பாஸ் சீசன் 3 ஆரம்பித்ததிலிருந்தே காதலும் துளிர் விட ஆரம்பித்தது. ஆம் இந்நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில தினங்களுக்குள்ளே அபிராமி கவினை காதலிக்கிறேன் என்று கூறினார்.

அதற்கு கவின் மறுப்பு தெரிவிக்க அபிராமி முகேனைக் காதலிக்க ஆரம்பித்தார். ஆனால் முகேன் அபிராமியை தோழியாகவே அவதானித்து வந்தார். அதன் பின்பு மீரா மிதுன் தர்ஷனைக் காதலிக்கிறேன் என்றும் திருமணம் குறித்து தனது தாயிடம் பேச கூறியதாகவும் நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது.

பின்பு ஷெரின் தர்ஷனைக் காதலிக்க ஆரம்பித்தார். இவர்களின் ரொமான்ஸ் காட்சியினையும் ரசிகர்கள் ரசித்து வந்துடன் இவர்களுக்கும் ஆர்மியினர் உருவாகினர். தற்போது வெளியே வந்த பின்பு தர்ஷனைக் குறித்து ஷெரின் எதுவும் கதைக்கவில்லை.

இவை எல்லாவற்றையும் விட மிகவும் பெரியதாகவும், பார்வையாளர்களை சில தருணங்களில் வெறுக்க வைத்ததும் கவினின் காதல் தான். ஆரம்பத்தில் சாக்ஷியும், கவினும் காதலித்து வந்தனர். ஆனால் சிறிது நாட்கள் கடந்த பின்பே விளையாட்டிற்காக கவின் போட்ட ட்ரிக் என்று தெரியவர பிரச்சினை பிக்பாஸ் வீட்டில் பூதாகரமாகவே வெடித்தது.

பின்பு கவின் லொஸ்லியாவிடம் அதிகமாக கதைத்து வந்ததை அவதானித்து, பொறாமையில் பொங்கி எழுந்த சாக்ஷி உச்சக்கட்ட சண்டைக்கு சென்றார். பின்பு சாக்ஷி வெளியேறிய பின்பு லொஸ்லியாவினை மட்டும் காதலித்து வந்தார் கவின். லொஸ்லியாவிற்கும் கவின் மீது விருப்பம் ஏற்பட்ட தருணத்தில், லொஸ்லியாவின் தந்தை உள்ளே வந்து நடந்துகொண்ட விதத்தினை வைத்து இருவரும் சற்று ஒதுங்கி இருந்தனர்.

ஆனால் கடைசி சில வாரங்களில் இருவரும் மீண்டும் கதைக்க ஆரம்பித்து மகிழ்ச்சியாகவே இருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கவின், லொஸ்லியா காதல் குறித்து என்ன முடிவு எடுத்துள்ளனர் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது வரை ஏமாற்றமே காணப்பட்டுள்ளது. ஆம் இதுவரை இருவரில் ஒருவர் கூட காதலைக் குறித்து வாய்திறக்கவில்லை.

இந்நிலையில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகை சித்ரா லொஸ்லியா, கவின் காதலைக் குறித்து மிகவும் கோபமாக பேசியுள்ளார்.

இவர்களது லவ் கேவலமான லவ் என்றும், இதெல்லாம் லவ்வா என்று பயங்கரமாக பேசியுள்ளார். பின்பு இதற்கு க்ரஷ் என்று கூறுகிறார்களே என்ற சித்ராவிடம் கேட்டதற்கு, அந்த காலத்தில் எல்லாம் க்ரஷ் என்றால் எழு வருடம், எட்டு வருடம் ஒருவர் மீதே இருக்கும். பத்து வருடம் கூட இருக்கும். இவர்களைப் பார்த்தால் ஃபாஸ்ட் புட் மாதிரி தோன்றுகின்றது. இது ஃபாஸ்ட் புட் தான் என்றும் மிகவும் கெடுதல் என்றும் இதெல்லாம் வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் இதுக்கு பெயர் லவ்வா... கருமம் பிடித்தது... என்றும் படுபயங்கரமாக பேசியுள்ளார்.

loading...