ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா வருங்கால கணவர் யார் தெரியுமா..?

Report
594Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்த சீரியல் ரோஜா. இந்த ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் தான் பிரியங்கா.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எல்லாத்துக்கும் சாரி, எப்படா வருவ? நான் உனக்காக காத்துட்டு இருக்கேன்டா என்று செம ஃபீலிங் காதலனை நினைத்து ரோஜா கூறியிருந்தார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துக்கள் எழுந்து வந்த நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, தெலுங்கு சினிமா திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல தமிழ் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு தீராத ஆசை இருந்தது. யார் யாரையோ பார்த்து? வாய்ப்பு கேட்டு, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை போல எனக்கு தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் ஹன்சிகாவுக்கு ஃப்ரெண்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்பு, வாய்ப்புகள் குறைந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ரோஜா என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியல் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. நான் டிவி மூலம் எல்லார் வீட்டுலேயும் இருக்கெனு நெனைக்கும் போது சந்தோஷமாக இருக்கிரது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் என்பவருடன் கடந்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நான் அவரை செல்லமா கிட்டுலு என்று தான் கூப்பிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

ராகுல், தெலுங்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் முன்னனி நடிகராக இருக்கிறார்.

இந்நிலையில், இருவரும் ஒரே வேலையில் இருப்பதால் ஒருத்தருக்கொருத்தர் பேச முடியாம, பார்க்க முடியாமல் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும், எங்க நிச்சயதார்தம் முடிந்த பின் கல்யாணத்தை எப்ப வைக்கலாம் என்று கேட்ட போது எங்க இரண்டு பேருக்கும் நேரமில்லாமல் தள்ளி போய்க்கொண்டு இருந்தது. அதனால கொஞ்சம் சின்ன, சின்ன சண்டை வந்து பெரிசா வந்துருச்சு.

திடீர்னு அவரு எனக்கு இந்த வேலையே வேணாம்னு சொல்லிட்டு மலேசியா சென்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு போயிட்டார். ஆனால், எல்லாரும் சொல்றாங்க எங்களுக்கு பிரேக்கப் ஆயிருச்சுன்னு. அந்த மாதிரிலாம் எதுவும் இல்லைங்க. நாங்க பேசிட்டு தான் இருக்கோம். கூடிய சீக்கிரம் எங்க கல்யாணத்தை பத்தி அறிவிப்போம் என சிரித்துக்கொண்டே சொன்னார். அது மட்டும் இல்லைங்க இந்த வருஷம் கடைசியில் எங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்றார் பிரியங்கா

21594 total views