விமான நிலையத்தில் லக்கேஜை குறைக்க இளம்பெண் செய்த செயலை பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..!

Report
1019Shares

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஜெல் ரோட்ரிக்ஸ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிநாடு செல்வதற்காக விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார்.

இந்நிலையில், இவர் புக் செய்திருந்த விமான டிக்கெட்டிற்கு வெறும் 6.5 கிலோ எடை கொண்ட லக்கேஜ் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஜெல் ரோட்ரிக்ஸிடம் 9 கிலோ எடை கொண்ட லக்கேஜ் இருந்துள்ளது.

இதனால், செய்வதறியாது முழித்த ஜெல் சட்டென்று புத்திசாலிதனமாக யோசித்து, பெட்டியை திறந்து அதிலிருந்து 2.5 கிலோ உடைகளை எடுத்து தனது உடைக்கு மேலேயே அணியத்துவங்கியுள்ளார்.

பின்பு, தன் லக்கேஜை 6.5 கிலோவாகக் குறைத்துக்கொண்டு மற்ற உடைகளை எல்லாம் அணிந்தபடியே விமானத்தில் பறந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

loading...