இறுதி ஆசை நிறைவேறாமல் பிரிந்த முரளியின் உயிர்! தற்போது அம்பலமான பல நாள் ரகசியம்

Report
1560Shares

சென்னை பிரபல திரைப்பட நடிகர் முரளி யாராலும் அவ்வளவு விரைவில் மறந்து விட முடியாது. அவரின் வாழ்க்கை பயணத்தில் ரசிகர்கள் கற்று கொள்ள வேண்டிய பாடம் அதிகம் உள்ளது.

அவர் சிறந்த நடிகராக மற்றும் அல்ல ஜெயலலிதாவின் மீது அதிக பற்று கொண்டவராகவும் இருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயமே.

ஜெயலலிதா மீது கொண்ட பற்று காரணமாக அதிமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். அது மட்டும் இல்லை. அதிமுக கட்சியின் அது சுற்றுப்பயணம், பிரச்சாரங்களையும் அயராது மேற்கொண்டவர்.

இந்நிலையில் நடிகர் முரளி பற்றி பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மேல் கொண்ட பற்று காரணமாகவே, 2006ஆம் ஆண்டு தன்னை அதிமுக கட்சியில் இணைத்து கொண்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் திகதி அறிவித்தவுடன் ஜெயலலிதாவை எப்படியாவது முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார்.

இதுதான் என் ஆசை என்றும் கூறியிருந்தார். ஆனால், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி யாரும் நினைத்துப் பார்க்காத அளவில் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

அப்போது அவருக்கு 46 வயது தான். ஆனால், அவர் கனவு கண்டதைப் போலவே ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு முதலமைச்சரானார். மேலும்,முரளி அவர்கள் ஆத்மாவும் சாந்தி அடைந்து இருக்கும் என்றும் கூறினார்கள்.

இந்த தகவல் அவர் இறந்து பல வருடஙகளின் பின்னர் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சாதனை பயணம்

1984ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக முரளி அறிமுகமானவர்.

இவரது தந்தை சித்தலிங்கையா பிரபலமான கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர். கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க நடிகர் முரளி.

முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார்.

காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள். பகல் நிலவு, இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார்.

சாதனை படைத்த இதயம்

முரளியின் நடிப்பில் வெளியான புது வசந்தம், இதயம் ஆகிய படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படங்களாகும்.

குறிப்பாக புது வசந்தம் தமிழ்த் திரையுலகில் புதிய வரிசைப் படங்களுக்கு இலக்கணம் வகுத்தது.

இதயம் திரைப்படத்தில் காதல் சொல்லப்பட்ட விதமும், முரளியின் நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

தமிழ் உணர்வாளர்

பாணா காத்தாடி தவிர தனது படங்கள் அனைத்திலும் ஹீரோவாகவே நடித்த பெருமைக்குரியவர்.

முரளியின் தந்தை கன்னடர் என்றாலும், அவரது தாய் தமிழ்ப் பெண். காவிரிப் பிரச்சனையின்போது தமிழ்த் திரையுலகம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு தனது உணர்வைப் பதிவு செய்தார்.

அவரது மகன் அதர்வாவை பாணா காத்தாடி படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தார். அவர் ஹீராவோக நடித்த முதல் படமான பாணா காத்தாடியில் முரளியும் சிறிய ரோலில் நடித்திருந்தார்.

மகன் நடித்த முதல் படமே முரளியின் கடைசிப் படமாக அமைந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

loading...