குழந்தை நட்சத்திர நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் சினிமா திரையுலகம்..!

Report
1276Shares

ரியாலிட்டி ஷோவின் மூலம் புகழ்பெற்றவர் தான் பிரபலமான குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய் கிருஷ்ணா. இவர் அந்த வகையில் தெலுங்கில், ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

இவர் திடீரென்று டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ள சம்பவம், தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கோகுல் சாய் கிருஷ்ணா சித்தூர் மாவட்டம், மடப்பள்ளியில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இவருக்கு, கடந்த வாரம் முதல் அதிக அளவில் காச்சல் இருந்துள்ளது. இதனால் பெங்களூருவில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மூச்சு திணறலும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 17 ஆம் தேதி அன்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா, தன்னுடைய இரங்கலை, கோகுல் சாய் கிருஷ்ணாவின் பெற்றோர் யோகேந்திரா மற்றும் சுமஞ்சலி ஆகியோருக்கு தெரிவித்துள்ளார்.

40535 total views