பிரிந்து சென்ற ஈழத்து பெண்! லொஸ்லியாவின் முகத்தினை கூட திரும்பி பார்க்காத கவின்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
2833Shares

லொஸ்லியாவின் திருமணத்தை நடத்தி வைத்தே தீருவது என கவிலியா ஆர்மியினர் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் தோறும் ஒரு டச்சிங்கான காதல் வருவது சகஜம் தான்.

ஆனால், கடந்த சீசன்களைவிட இம்முறை கவின் - லொஸ்லியா காதல் மக்கள் மனதில் கொஞ்சம் ஆழமாகவே பதிந்து விட்டது எனலாம்.

ஒரு கட்டத்திற்குப் பின் கவின் - லியாவைக் காட்டாத புரொமோக்களைக் கூட நெட்டிசன்கள் புறக்கணிக்கத் தொடங்கி விட்டனர். அதோடு, கவிலியா என்ற பெயரில் புதிய ஆர்மிக்களும் முளைத்தன.

கவின் ஐந்து லட்ச ரூபாயோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட, லொஸ்லியா அழுததைப் பார்த்து அவரது ரசிகர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்காத குறைதான்.

கவினுக்காகவே லொஸ்லியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என அவர்கள் தீவிரமாக உழைத்தனர். அதன் பலனாக லொஸ்லியாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

இந்நிலையில் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகின்து. அண்மையில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தின் போது கூட கவின் லொஸ்லியாவிடம் பேசவில்லையாம்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான கொண்டாட்டம் தொலைக்காட்சியில் இன்னும் ஒளிபரப்பாக வில்லை. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் நடனமாடியுள்ளனர்.

ஏற்கனவே இதற்கான ரிகர்சல் காட்சிகளை பிக்பாஸ் பிரபலங்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டும் இருந்தனர்.

நேற்றைய தினம் லொஸ்லியாவின் முகத்தினை கூட கவின் பார்க்க வில்லை என்று கூறப்படுகின்றது.

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கூட சக போட்டியாளர்களுடன் புகைப்படம் எடுத்த கவின் லொஸ்லியாவுடன் ஒரு புகைப்படம் கூட தனியாக எடுக்க வில்லை.

இந்நிலையில் இதுகுறித்து சீனியர் நடிகை ஒருவர் கவினிடம் கேட்ட போது கூட, எனக்கு சில பொறுப்புகள் உள்ளது, இப்போது இதுகுறித்து பேசவிரும்பவில்லை என தெரிவித்ததாக தகவல் பரவி வருகிறது.

கவின் லொஸ்லியாவை புறக்கணிப்பது பொறுப்புகளுக்காகவா அல்லது லொஸ்லியாவின் குடும்பம் சம்மதம் தெரிவிக்காதமையினால என்பது தெரிய வில்லை. ஏற்கனவே லொஸ்லியா பிக் பாஸ் வீட்டிலெ் செய்தியாளர்களை சந்தித்த போது எனது பெற்றோரின் சம்மதத்துடன் தான் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார்.

இதேவேளை, இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்றால் லொஸ்லியா மற்றும் கவின் தான் ஒரு பதிலை வழங்க வேண்டும். எனினும் லொஸ்லியா கவினை எப்படியாவது சேர்த்து வைத்து விட வேண்டும் என்ற முயற்சியில் கவிலியா ஆர்மியினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

அவர்க புகைப்படம் எடுக்கா விட்டாலும், அவர்களின் தனிப்படங்களை இணைத்து வெளியிட்டு ரசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...