யாஷிகாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்... பிக்பாஸ் பிரபலம் ஓபன்டாக்..!

Report
634Shares

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

பின்னர், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த இவர், கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகளவில் பிரபலமடைந்தார்.

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தாவும் மிகவும் நெருக்கமான தோழிகளாக இன்றளவும் வலம் வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் தங்களது நட்பு ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஒரு ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து கொண்டாடியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, யாஷிகா உடன் இணைந்து நடிப்பீர்களா என கேள்வி எழுப்பிய ஊடகம் ஒன்றிற்கு ஐஸ்வர்யா கூறிய விஷயம் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இதற்கு ஐஸ்வர்யா தத்தா யாஷிகாவின் ஜாம்பி படம் மிகவும் பிடித்திருந்தது. நல்ல கதைகள் கிடைத்தால் இருவரும் இணைந்து நடிக்கலாம் என்றுதான் நாங்கள் நினைத்து இருந்தோம் ஆனால் தற்பொழுது சேர்ந்து வேண்டாம் என தோன்றுகிறது.

மேலும், நாங்கள் இருவரும் மிகவும் குளோஸ் பிரண்ட்ஸ் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் எங்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு நட்பு கெட்டு போய்விடும் என்ற பயம் தோன்றியது. எனவே நல்ல தோழிகளாக இருக்கவே நான் விரும்புகிறேன் இருவருக்கும் அதே எண்ணம்தான் சேர்ந்து நடிக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை என தெரிவித்துள்ளார்.c

loading...