அட்லியின் மனைவி பிரியா... 13 வருடங்களுக்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க...! வைரலாகும் புகைப்படம்

Report
1072Shares

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பபட்ட தொலைக்காட்சி தொடர் கனா காணும் காலங்கள்.

இந்த சீரியல் மூலம் தான் நடிகை பிரியா சினிமாவில் அறிமுகமானார்.

அதில் அவரின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது, பின்னர் சிங்கம், நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

சிங்கம் படத்தில் நடிகை அனுஷ்காவின் தங்கை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநராக இருக்கும், இயக்குநர் அட்லியை பிரியா 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், பிரியா கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அதில், மிகவும் அழகாக இருக்கும் பிரியா தொடர்ந்து சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்காமல் போனது வருத்தமாக இருக்கிறது என்றும், 13 வருடங்களுக்கு முன்பே பிரியா மிகவும் அழகாக உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

47214 total views