வனிதா வீட்டில் விசேஷம்!... தாய்மாமனாக வந்தது யார் தெரியுமா?

Report
2587Shares

பரபரப்புடனும், பல்வேறு சர்ச்சைகளுடன் நடந்து முடிந்தது பிக்பாஸ் சீசன் 3.

மற்ற இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது என்றே சொல்லலாம்.

நிகழ்ச்சி முடிந்தபின்னர் அவர்கள் செய்யும் செயல்கள் தினந்தோறும் செய்திகளில் இடம்பிடித்து விடுகின்றன.

சமீபத்தில் வனிதாவின் வீட்டில் விசேஷம் நடந்த போது பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர், இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியானது.

அதாவது வனிதாவின் மூத்த மகள் வயதுக்கு வந்துவிட்டாராம், இதில் தாய்மாமனாக சேரன் கலந்து கொண்டாராம்.

ரத்த பந்தங்கள் ஒதுக்கினாலும் பிக்பாஸ் மூலம் தனக்கு நிறைய சொந்தங்கள் கிடைத்து விட்டதாக கூறும் வனிதா, சேரனை அண்ணனாகவும், லொஸ்லியாவை தங்கையாகவும் நினைத்தே பழகுவதாக தெரிவித்துள்ளார்.

loading...