பிக்பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையை பகிர்ந்துகொண்ட போட்டியாளர்கள்... சர்ச்சை வீடியோவிற்கு விளக்கமளித்த பிக்பாஸ் தரப்பு..!

Report
1052Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியில் முதலில் ஆரம்பிக்கப்பட்டு 12 சீசன்களை தாண்டி 13வது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாக சமீபத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான்கான் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, குறித்த நிகழ்ச்சியில், சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோட் ஒன்றில், மஹிரா சர்மா மற்றும் அசிம் ரியாஸ் ஆகிய இருவரும் ஜோடியாய் கட்டிலில் கட்டிப்பிடித்தபடி படுத்திருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வந்தன.

வீடியோவைப் பார்த்த பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ஒவ்வொரு டாஸ்க் தரப்படுவது வழக்கம். இதன்படி, Bed Friend Forever என்ற தலைப்பில் தரப்பட்ட டாஸ்கில், மஹிராவும், அசிம் ரியாஸூம் படுக்கையில் கொஞ்சியபடி பங்கேற்றுள்ளனர் என்று கூறப்பட்டது.

இருப்பினும், இந்த விடயம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்களும், கடும் கண்டனம் குவிந்து வருகிறது.

மேலும், சிலர், பிராமண பெண்ணான மஹிராவை, முஸ்லீம் ஆண் அசிம் ரியாஸ் எப்படி தொடலாம் எனக் கேட்டு, சமூக ஊடகங்களில் மோசமாக திட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், இதுபற்றி பிக் பாஸ் இந்தி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சமூக ஊடகங்களில் பரவி வரும் குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர்கள், அசிம் ரியாஸ் மற்றும் மஹிரா இல்லை. அவர்கள் 2 பேரும் பிக் பாஸ் 9 சீசனில் பங்கேற்ற சுயாஷ் ராய் மற்றும் கிஸ்வார் மெர்ச்சண்ட் ஆகியோர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

38350 total views