தோசை சாப்பிட்டதும் மயங்கிய கணவர்... விடிய விடிய பிணத்துடன் மனைவி செய்த காரியம்!

Report
1953Shares

சென்னை புழல் பகுதியில் கணவனுக்கு தோசையில் தூக்கமருந்து கொடுத்து பின்பு கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி கணவரின் சடலத்துடன் படுத்துறங்கியது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமண விழா ஒன்றில் சுரெஷ், அனுசியா இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்பு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு லோகேஷ்(4) என்ற மகனுடன் புழல் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

சுரேஷ் கறிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அனுசுயா பட்டப்படிப்பு முடித்துள்ளதால் மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க சுரேஷிற்கு அனுசியா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தினமும் மதுவருந்திவிட்டு தன்னை சித்ரவதை செய்வதும், அதிகமாக சந்தேகமடைந்த கணவரை கொலை செய்வதற்கு அனுசியா திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக தனது நண்பர் முரசொலி மாறனிடம் உதவி கேட்டுள்ளார்.

அவர் தூக்கமாத்திரை கொடுத்து பின்பு கொலை செய்வதற்கு ஐடியா கொடுத்துள்ளார். அதன்படி அனுசியா தனது மெடிக்கல் ஷாப்பிலிருந்து தூக்கமாத்திரை எடுத்துவந்து அதனை பொடி செய்து தோசை மாவில் கலந்து தோசை சுட்டு கொடுத்துள்ளார்.

கணவர் சுரேஷ் மயக்கமடைந்ததால், தனது நண்பரை வீட்டிற்கு வரவழைத்து சுரேஷின் கால்களை முரசொலிமாறன் பிடித்துக்கொள்ள அனுசியா துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

பின்பு முரசொலி மாறன் தனது வீட்டிற்கு சென்றுவிட, அனுசியா கணவரின் பிணத்திற்கு அருகேயே தூங்கியுள்ளார். விடிந்தததும் அதிகமாக குடித்ததால் இவ்வாறு திடீரென இறந்துவிட்டார் என்று அழுது புலம்பியுள்ளார்.

இவரின் புலம்பல் சத்தத்தைக் கேட்ட பின்பு தான் அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். பின்பு பொலிசார் வந்து விசாரித்ததில் அவரிடமும் இதே கதையையே கூறியுள்ளார் அனுசியா.

பின்பு சுரேஷின் கழுத்தில் காயம் இருந்ததை அவதானித்த பொலிசார், மனைவி அனுசியாவிடம் தீவிரமாக விசாரித்ததில் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார். தற்போது அனுசியா, முரசொலி இருவரையும் கைதுசெய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

loading...