வில்லன் நடிகர் ரகுவரன் ரோகினியின் மகனா இது..? இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..! வைரல் புகைப்படம்

Report
1897Shares

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக இருந்தவர் நடிகர் ரகுவரன் தான்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரகுவரன் முதன்முதலில் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.

பின்பு, தமிழ் சினிமாவில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமானார் ரசகுவரன் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரகுவரன், அதன் பின்னர் வில்லனாக நடிக்க துவங்கினார்.

இவர் ஹீரோவாக நடித்ததை காட்டிலும், வில்லனாக நடித்ததற்கே சிறந்த வரவேற்பு கிடைத்தது. இதனால், இவர் தொடர்ச்சியாக வில்லானாக நடிக்க ஆரம்பித்தார்.

பாட்சா படத்தில் வில்லனாக நடித்தது.. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு சமமாக ரகுவரனை தூக்கி வைத்து கொண்டாடியது.

இதற்கிடையில், ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தார். 1975 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை ரோகினி தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோகினி அதன் பின்னர் தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்னர் ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி வரன் என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர தம்பதிகளான ரகுவரன் மற்றும் ரோகிணியின் மகன் யார் என்பதும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்தான்.

இந்நிலையில், தற்போது ரிஷிவரனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

குறித்த புகைப்படம்...

loading...