லொஸ்லியா விஷயத்தில் இது தான் உண்மை.. நான் வாழவே தகுதியற்றவன்.. உருக்கமாக பேசிய சேரன்..!

Report
1830Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும் மிகவும் சர்ச்சைக்குரியதாகவும், சண்டைகள் நிறைந்ததாகவும் இருந்தது.

இந்நிலையில், இந்த சீசனில் போட்டியாளர்களாக, ஃபாத்திமா பாபு, சேரன், வனிதா விஜயக்குமார், மோகன் வைத்யா, அபிராமி, மீராமிதுன், சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, முகேன் ராவ், தர்ஷன், சாண்டி, கவின், லொஸ்லியா, ஷெரின், சரவணன், ரேஷ்மா, ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், சேரன், லொஸ்லியா அப்பா மகள் போல் பழகி வந்தனர். ஆனால் சமூக வலைதளங்களில் சேரன் லொஸ்லியாவிடம் போலியாக நடிக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் உண்மையாகவே லொஸ்லியாவிற்கு ஒரு அப்பா போல் தான் இருந்தேன் என்று பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது திரையரங்குக்கு வெளிவர உள்ள ‘ராஜாவுக்கு செக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையிலும் இதுகுறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, வாழ்க்கையில் அப்பா என்ற உணர்வு ரொம்ப உன்னதமானது, புனிதமானது இதுகுறித்து ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு கொடுக்கும் முத்தம் காமத்திற்கு உரியது அன்று என பல பலபேர் கூறியுள்ளார்கள்.

மேலும், நான் அப்பா என்பதை அடிக்கடி கடவுள் எனக்கு ஞாபகம் படித்திக்கொண்டே இருப்பார். சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது நான் அப்பாவாக வாழ்ந்து வந்தேன். மேலும் ,அந்த நிகழ்ச்சியில் உண்மையாகவும், நேர்மையாகவும் தான் இருந்தேன்.

நான் ஒருபோதும் போலியாக நடிக்கவில்லை. அப்பா மகள் பாசத்தை பொய்யாக காண்பித்தேன் என்று கூறினால் இந்த உலகில் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தந்தை மகள் மீது காட்டும் பாசத்திற்கு அளவு ஏதும் இல்லை. அந்த பாசத்தை காலங்கள் தான் சொல்லும். எது உண்மையான பாசம்? எவ்வளவு ஆழமான பாசம்? என்பது என்று.

loading...