ஆபாசமாக மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுக்கிறார்.. சாண்டியின் முன்னாள் மனைவி பரபரப்பு புகார்..!

Report
946Shares

பிக்பாஸ் சீசன் 2-ன் போட்டியாளரான காஜல் பசுபதி சில மர்ம நபர்கள் தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவதுடன், தொடர்ந்து கால் செய்து தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்

இவர் ட்விட்டர் பக்கத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது நிறைவடைந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3-ஐ ஆரம்பம் முதலே பார்த்து தினமும் தன் கருத்துக்களை வெளியிட்டு வந்தார் காஜல்.

அதுமட்டுமல்லாது, தனது முன்னாள் கணவரான சாண்டிக்கு தனது ஆதரவையும் கொடுத்து வந்ததோடு ட்விட்டர் பதிவு மூலம் சாண்டிக்கு வாக்கும் சேகரித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது ட்விட்டர் பக்கத்தில், தன்னை சில மர்ம நபர்கள் தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்து டார்ச்சர் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, ஏற்கனவே இவரை போலீசில் பிடித்துக் கொடுத்தேன். ஆனால் தன் பணபலத்தை பயன்படுத்தி வெளியில் வந்து விட்டார். தற்போது மீண்டும் எனக்கு டார்ச்சர் தருகிறார்.

வாட்ஸ் அப்பில் மிகவும் அசிங்க அசிங்கமாக மெசேஜ் அனுப்புகிறான். வேறு வேறு நம்பர்களில் இருந்து கால் செய்கிறான். பிளாக் செய்தே டயர்ட் ஆகி விட்டேன்.

இவரை சைபர் கிரைமில் பிடித்து உள்ளே தள்ள ஏதும் வாய்ப்பிருக்கிறதா?’ என தன் ரசிகர்களிடம் அவர் ஆலோசனை கேட்டுள்ளார்.

loading...