பிக்பாஸ் காதல் ஜோடிக்கு கிடைத்த பிரமாண்ட வாய்ப்பு..! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

Report
2010Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் அதிகளவில் சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்யப்பட்டவர்கள் இவர்கள் இருவர் தான் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு, ட்விட்டரில் கவின், லோஸ்லியா பெயர்கள் ட்ரெண்டிங்கில் இருந்துகொண்டே இருந்தன.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்த இவர்கள், தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் ஜோடிகளாக நடிக்க உள்ளனர்

அவர்களை விஜய் டிவி ராஜா ராணி சீரியலின் இரண்டாம் சீசனில் ஜோடியாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்பதை நாம் ஏற்கனவே நமது தளத்தில் தெரிவித்திருந்தோம்.

இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம், அதனால் இந்த வாய்ப்பை கவின்-லாஸ்லியா ஏற்றுக்கொள்வார்களா? அல்லது சினிமா வாய்ப்புக்காக காத்திருப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

இதற்கிடையில், இவர்கள் கூடிய சீக்கிரம் நிஜ ஜோடியாகவும் மாற உள்ளனர். அதாவது பெற்றோரிடம் பேசி கொண்டிருக்கிறேன் கண்டிப்பாக அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வேன் என லாஸ்லியா தெரிவித்து வருகிறார்

54577 total views