சின்ன தம்பி குஷ்புனு சொல்லி ஏமாத்திட்டாங்க.. சீரியலில் இருந்து திடீரென விலகிய காரணத்தை கூறிய நடிகை..!

Report
1251Shares

சன் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது அழகு என்னும் சீரியல்.

குடும்ப பெண்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்துள்ள இத்தொடரை இயக்குனர் ரவி வி. சி மற்றும் ரத்தினம் அவர்கள் இயக்கினார்கள்.

இந்த சீரியலில் ரேவதி கதாநாயகியாகவும், இவருடன் தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் அழகு சீரியலில் இருந்து திடீரென சஹானா வெளியேறினார்.

இதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது... இந்த சீரியல் 500 எபிஷோடை கடந்தும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியே இருக்கு. நான் ரேவதிக்கு ஒரே மகள் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் ரொம்ப பெருமை படுகிறேன் என்று அடிக்கடி சொல்வார். ஆனால் இயக்குனர்கள் என்னிடம் நடிகை ரேவதிக்கு லீடு கொடுக்கும் கதையில் நடிகை உள்ளீர்கள் என்று சொல்லிதான் கூப்பிட்டாங்க.

மேலும், இந்த தொடரலில் நாலு அண்ணன், தம்பிகளுக்கு ஒரே தங்கச்சி.சொல்லப்போனால் ‘ சின்ன தம்பி’ ,குஷ்பு மாதிரி நீங்க இந்த கதையில் நடிக்க போகிறீர்கள் என்று என்கிட்ட சொன்னாங்க.

அது மட்டும் இல்லைங்க இந்த சீரியலில் உங்கள் கேரக்டருக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் இருக்குன்னு சொன்னார்கள். அதனாலதான் யாருக்கு? இப்படி கிடைக்கும் ஒரு ஜாக்கபாட்னு நினைச்சு சந்தோஷமா நடிக்க ஒத்துக்கிட்டேன்.

சீரியலைப் பொருத்தவரை சில நாட்கள் கடந்துவிட்டால் கேரக்டரை மாற்றிவிடுவார்கள். ஆனால் இந்த சீரியலில் என் கதாபாத்திரம் அப்படியே தான் இருந்தது.

நான் என்னுடைய கேரக்டரை டெவலப் பன்னும்படி கூறி பார்த்தேன். ஆனால் அதை காதில் வாங்கவே இல்லை. வேற வழி இல்லாம தான் நான் விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார் சஹானா.

loading...