கவின் பாடலுக்கு லொஸ்லியா போட்ட குத்தாட்டம்! வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி

Report
2426Shares

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லொஸ்லியா என்ன செய்தாலும் அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இதனால் சமூகவலைதளத்தில் பார்த்துப் பார்த்து மிகவும் குறைவான பதிவுகளை தான் போட்டு வருகிறார் லொஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை கவின் மற்றும் லொஸ்லியாவின் ரொமான்ஸ் தான் மிகவும் ஹைலைட்டாக இருந்து வந்தது.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிறைவடைந்து இதுவரை இன்னும் இவர்கள் இருவரும் சந்திக்கவில்லை.

கவின், பாய்ஸ் கேங்கில் உள்ள அனைவரையும் சந்தித்து தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அதேபோல லொஸ்லியாவும் சாண்டி, சேரன் பாத்திமா பாபு, அபிராமி போன்றவர்களை சந்தித்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

ஆனால், கவின் மற்றும் லொஸ்லியா இதுவரை எந்த ஒரு சந்திப்பிலும் சந்திக்காமல் இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கவின் பாடிய பாடலுக்கு லொஸ்லியா ரசிகர்களுடன் நடனம் ஆடியுள்ளார். அந்த காட்சியையும் ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

loading...