பிக் பாஸ் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! தீயாய் பரவும் தகவல்... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

Report
1845Shares

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் ஒரு புதிய படம் எடுக்கவுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

“ராஜாவுக்கு செக்” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்துள்ளது.

குறித்த படத்தின் டிரைலரை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியிட்டுள்ளார்கள். எனினும், அப்போது அந்த அளவிற்கு இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை என்று கூறியிருந்தார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் கிடைத்த ஆதரவை வைத்து இப்போது மீண்டும் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளனர்.

இந்த படம் எமோஷனல், திரில்லர், ஆக்ஷன், காமெடி என பல கலவைகளை கொண்ட காமெடி இருக்கும் என படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து சேரன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது,

தந்தை மகள் மீது காட்டும் பாசத்திற்கு அளவு ஏதும் இல்லை. அந்த பாசத்தை காலங்கள் தான் சொல்லும்.

எது உண்மையான பாசம்? எவ்வளவு ஆழமான பாசம்? என்பது என்று. அதே சமயத்தில் இந்த ‘ராஜாவுக்கு செக் ‘ என்ற படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் என் நண்பர்கள் அமீர், வசந்தபாலன், வெற்றிமாறன், ராம். சரண் ஆகிய அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன் என்று கூறியிருந்தார்.

சேரன் சிறந்த மனிதர் என்பதையும் விட மிகச் சிறந்த தந்தை என்று தான் கூற வேண்டும்.

இலங்கை லொஸ்லியா விஷயத்தில் மூலம் தான் சேரன் மீதான மதிப்பு மக்களிடையே அதிகரித்தது என்று கூட கூறலாம். அவர் டுவிட் மூலம் பின்னணியில் இதை தான் கூறியிருக்கின்றார் போல.

இதேவேளை, அவரின் நேர்மைக்கும், உண்மைக்கும் கிடைத்த பரிசாக கூட இந்த வாய்ப்பினை கருதலாம். சேரனின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

loading...