சும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...!

Report
1228Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 105 நாட்களாக பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் தாண்டி கடந்த 6 ஆம் திகதி நிறைவடைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கொமெடி நடிகை மதுமிதாவும் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில், இவர், முதல் வாரமே ஆடைகள், மற்றும் பாட்டில் பேபி குறித்து பேசியது போட்டியாளர்களுக்கு பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.

இதனால், ஒரு சிலரை தவிர, இவரை ஒட்டுமொத்த குடும்பமும் வெறுக்க ஆரம்பித்த நிலையில், இவர் என்ன கூறினாலும் தவறு என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர்.

இதைத்தொடர்ந்து, திடீரென்று, பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததாக கூறி அவர் வெளியேற்றப்பட்டார்.

இதற்கு, சாண்டி குரூப் தான் தான் காரணம் என்று கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இவர் மீது விஜய் தொலைக்காட்சி பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா, தொலைக்காட்சி கொடுத்த புகார் பொய் புகார் என்று கூறினார். பின்பு நீண்ட நாட்களுக்கு பின்பு பேட்டிகள் கொடுக்க தொடங்கிய மதுமிதா, தான் தற்கொலை முயற்சி செய்யவில்லை, என் கருத்து நியாயமானது என்று நிரூபிப்பதற்கு தான் அவ்வாறு கூறினேன் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், அபிராமி ஆண்களுக்கு முன்னால் உள்ளாடை கூட அணியாமல் சுற்றி வந்தார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் அபிராமி இதுகுறித்து பேசியுள்ளார்.

அதில், அபிராமி ஆடை விவகாரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே மதுமிதா பேசியிருக்கிறார். சிலர் எப்போதும் மாற மாட்டார்கள்அவர்களை நாம் எவ்வளவுதான் நாம் நல்லபடியாக பார்த்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.

என்னை பொருத்தவரை நான் பார்த்தவரை மதுமிதா தனக்கு இதுதான் வேண்டும் அதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஒரு சிறு குழந்தை போலத்தான் இருந்துவந்தார். அப்படிப்பட்ட மதுமிதாவை தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த ஆடை விவகாரம் அடிக்கடி எனக்கு சங்கடமான விஷயமாக தொடர்ந்து வருகிறது. இதைப் பார்க்கும்போது மற்றவர்களும் மனநிலை மாறவேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன்.

அதேபோல எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நான் உள்ளாடை அணியாமல் இருந்ததை பலபேர் கமெண்ட் செய்தார்கள். அவர்களும் தமிழர்கள் தான் தமிழ் தமிழ் என்று சொல்லும் நபர்கள் தான் இதுபோன்ற கமெண்ட்களை போட்டு வந்தார்கள். ஆனால், அதனை ஒரு குப்பையாக நினைத்து நான் தூக்கி எறிந்து விட்டேன்.

நான் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியதை நமது நடத்தையில் தான் காட்ட வேண்டுமே தவிர அனைவரிடமும் போய் நாம் கூற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அடிக்கடி சொல்லும் உன்னதமான வார்த்தைகளில் பத்தினி என்று சொல்லும் அடங்கும். ஆனால், பத்தினி என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால், என்னை அசிங்கப் படுத்தும் கமெண்ட்கள் அதிகம் வருகிறது .

ஒரு பெண்ணை அவர் அணியும் ஆடையை காரணமாக காட்டி கற்பழித்து விட்டால் என்று கூறினால் அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா என்று கூறியுள்ளார் அபிராமி.