உச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..!

Report
881Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆபாசமாக உள்ளதால் தடைவிதிக்ககோரி நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

இந்தியில் பிக்பாஸ் 13வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபலமான கலர்ஸ் சேனல் பிக்பாஸ் 13 சீசனை ஒளிபரப்பி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இதனை பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும், இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே சர்ச்சைகளும் தொடர்ந்து வருகின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண் போட்டியாளர்கள், அறிமுகமே இல்லாத ஆண்களுடன் படுக்கையை ஷேர் செய்து கொள்ள வேண்டும் என டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் சில போட்டியாளர்கள் எல்லை மீறும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதையெல்லாம் தொலைக்காட்சிகளில் எந்த சென்சாரும் இல்லாமல் ஒளிப்பரப்ப படுகிறது. இது இந்திய கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

மேலும் சமூக வலைதளங்களில், பிக்பாஸ் 13 மற்றும் கலர்ஸ் சேனலை தடை செய்யக்கோரி ஹேஷ் டேக்குகளை உருவாக்கி மகாராஷ்டிரா மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் நிகழ்ச்சியில் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் அருகே கர்ணிசேனா அமைப்பை சேர்ந்தவர்களும் பிற அமைப்பில் உள்ளவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.