பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவினை சந்தித்த இயக்குனர்.. யார் தெரியுமா?.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Report
828Shares

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் மிகவும் வெற்றிகரமாகவே நிறைவடைந்தது இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் அதில் ரசிகர்களுக்கு பிடித்த சில போட்டியாளர்களும் இருந்து வந்தனர். அதில் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நபராக இருந்தவர் தான் நடிகர் கவின்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதைக் கொள்ளை கொண்டவர்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக இவர் நட்புனா என்ன தெரியுமா என்ற படத்திலும் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் கவினை இயக்குனர் சிவா அரவிந்த் சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. ஆனால், இது தனிப்பட்ட சந்திப்பு அல்லது கவின் நடிக்கப் போகும் அடுத்த படத்திற்கான சந்திப்பா என்பது இன்னும் தெரியவில்லை..

22478 total views