பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் லாஸ்லியா போட்ட முதல் பதிவு.. என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா?

Report
1299Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் அவர்களின் முகநூல் பக்கத்தில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இதுவரை வெளியே வந்த பின் லாஸ்லியா எந்த பதிவும் ரசிகர்களுக்கு சொல்லாத நிலையில், தற்போது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், முதலில் எனக்கு அளவு கடந்த அன்பை கொடுத்து எனக்கு ஆதரவாக இருந்து வந்த அனைவருக்கும் நன்றிகள். வெறும் நன்றி என்ற சிறு வார்த்தை உங்களுக்கு போதாது என்பது எனக்கு தெரியும். எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை எண்ணி நான் மிகவும் வியந்து போயிருக்கிறேன். அதற்கு மிக்க நன்றி. இதுநாள் வரை நான் என் இன்ஸ்டாகிராமில் வராமல் இருந்ததற்கு என்னை மன்னியுங்கள். கண்டிப்பாக உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்வேன். இது உங்களுக்கு நான் கொடுக்கும் வாக்குறுதி என்று பதிவிட்டுள்ளார்.

loading...