வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்து தாயகம் திரும்பினார் முகேன்... விமானத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இதோ

Report
957Shares

கடந்த 105 நாட்களாக மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் மட்டுமே. தற்போது நிகழ்ச்சி முடிவடைந்தாலும் போட்டியாளர்களுடன் ரசிகர்கள் தனது ஆசையினை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மலேசியாவில் இருந்து வந்து ஒட்டுமொத்த மக்களின் மனதையும் அள்ளிச்சென்றவர் தான் முகேன். நேற்றைய தினத்தில் சிறப்பு பேட்டி கொடுத்திருந்த வேளையில் தற்போது புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

முகேன் தற்போது தனது தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய செல்வதற்காக விமானநிலையம் சென்ற அவர் விமானத்தில் பணிப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

முகேன் பாடிய பாடல் பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டுமின்றி பிரபல இசையமைப்பாளர்களையும் அதிகமாக கவர்ந்துள்ளது என்பதை சமீபத்தில் அறிந்திருந்தோம்.

இந்நிலையில் முகேன் விரைவில் தமிழகத்திற்கு திரும்புவார் என்றும் தமிழ் இசையமைப்பாளர்களின் கவனத்தைப் பெற்று விரைவில் சினிமாவில் நடிப்பார் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

loading...