பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தான் பெஸ்ட்.. காரணத்துடன் பேசிய பிரபல நடிகை..!

Report
296Shares

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பபட்டு மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு 105 நாட்களாக ஒளிபரப்பபட்டு கடந்த ஞாயிற்று கிழமை நிறைவுற்றது.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்து மூன்று நாட்களாகியும் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சியின் மீதான மோகம் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிகழ்ச்சியானது, பல சர்ச்சைகளையும் ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தாலும் பிக் பாஸ் நிகிழ்ச்சையை ரசிகர்கள் காணாமல் இருக்கப்போவது இல்லை என்பது தான் உண்மை.

இருப்பினும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களில் முதல் சீசனைத்தான் மக்கள் அதிகளவில் விரும்பினர். காரணம், முதல் சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவருமே தங்களது உண்மையான முகத்தை காட்டி இருந்தார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் சிறந்த சீசன் என்று பிரபல நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ரசிகர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் மிகவும் வெற்றிகரமான சீசன் என்று பதிவிட அதற்கு பதிலளித்த காயத்ரி, உண்மைதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் மிகவும் வெற்றிகரமான சீசன் அதற்கு முக்கிய காரணமே அதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் அதைப் பற்றிய எந்த ஒரு அனுபவமும் அறிவும் இல்லாததால்தான் முதல் சீசன் மிகவும் இயல்பாக இருந்தது என்று கூறியுள்ளார்.

10275 total views