தர்ஷன் மற்றும் சாண்டிக்கு சிம்பு கொடுத்த பரிசு... எழுதிக் கொடுத்த வாழ்த்தினால் கடுப்பில் ரசிகர்கள்!

Report
823Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியே வந்த சாண்டி, தர்ஷன் பயங்கர குஷியில் காணப்படுகின்றனர். லாலாவுடன் பிக்பாஸ் பிரபலங்கள் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர்.

அதிலும் லாலாவுடன் கவின் விளையாடுகையில் தர்ஷனின் அம்மா மெய்மறந்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சாண்டி மற்றும் தர்ஷனை நடிகர் சிம்பு நேரில் பாராட்டியதோடு இருவருக்கும் பரிசு ஒன்றினை கொடுத்துள்ளார். தர்ஷனுக்கு ஹீரோ என்ற புத்தகத்தைக் கொடுத்துள்ளார். சாண்டிக்கு குரு என்ற புத்தகத்தினை கொடுத்துள்ளதோடு, அப்புத்தகத்தில் தன்னை குருநாதா என்றும் சாண்டியை சிஷ்யன் என்றும் கூறி தனது கையெழுத்தைப் போட்டுள்ளார்.

இதனை அவதானித்த நெட்டிசன்கள் இவ்வாறு தன்னைத்தானே பெருமை பேசிக்கொள்வதை நிறுத்தினால் தான் முன்னேறுவார் சிம்பு என்று கடுமையாக சாடி வருகின்றனர்.

22730 total views