ரசிகைகளிடம் சிக்கிய முகேன்... டைட்டில் வின்னரின் பரிதாபநிலையை காணொளியில் பாருங்க!

Report
438Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக மலேசியாவைச் சேர்ந்த முகேன் மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்டார்.

கடந்த 105 நாட்களில் எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு தனித்தனி ரசிகர் பட்டாளமே ஏற்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் முடிந்து வெளியில் வந்த பிரபலங்கள் சிலர் ரசிகர்களோடு நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டைட்டில் வின்னரான முகேன் நேற்றைய தினத்தில் சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

இங்கு அவரை சூழ்ந்த ரசிகர்கள் புகைப்படம் மற்றும் காணொளியினை எடுத்து அவரை திக்குமுக்காட வைத்துள்ளனர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவிருந்த கடைசி தருணத்தில் தனது கம்பீர குரலினால் பிக்பாஸ் முகேனிடம் பேசினார். அப்போது ஐயா முகேன் என்றும் அன்பு ஒன்று தான் அனாதை என்று அடிக்கடி கூறியவருக்கு, இங்கு யாரும் அனாதை இல்லை வெளியே வந்த பின்பு உங்களுக்குத் தெரியும் என்று கூறினார். பிக்பாஸ் கூறியதை மறுநாளே முகேன் அனுபவித்துள்ளார் என்பதற்கு ஆதாரமே இக்காட்சியாகும்.

17563 total views