பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் கலந்துகொள்ளாதது பற்றி.. முதன் முறையாக காட்டமாக பேசியுள்ள சித்தப்பு சரவணன்..!

Report
2104Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவில் பங்கேற்காதது குறித்து பயங்கர காட்டமாக பதிலளித்துள்ளார் நடிகர் சரவணன்.

80 காலக்கட்டத்தில் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகர் சரவணன். நீண்ட இடைவெளிக்கு பருத்திவீரன் படத்தில் சித்தப்புவாக நடித்து மக்களின் மனதில் மீண்டும் இடம்பிடித்தார்.

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் கல்ந்து கொண்ட சரவணன் அங்கேயும் சித்தப்புவாகவே வலம் வந்தார். கவின், சாண்டி ஆகிய இருவரும் சித்தப்பு என்று தான் அழைத்து வந்தார்கள்.

இந்நிலையில் ஒரு ஒரு எபிசோடின் போது கமல் பேசிய ஒரு உரையாடலின் போது, சரவணன் நானும் பெண்களை பேருந்தில் உரசியுள்ளேன் என்று பேசிய மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது. அதற்கு சரவணன் மன்னிப்பும் கேட்டார். ஆனாலும் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றினார்கள்.

சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்து நிறைய கருத்துகள் பகிரப்பட்டன. ஆனால் எது குறித்தும் அவர் வாய் திறக்கவில்லை. கலைமாமணி விருது விழாவின் போது கூட அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்காமல் சென்றுவிட்டார்.

இந்த சூழலில் பிக்பாஸ் இறுதிப்போட்டியின் போது சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் இருவருமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. சிறப்பு விருந்தினர்களாகவும் பிக்பாஸ் வீட்டிற்கு அவர்கள் செல்லவில்லை. இது அவர்களது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிக்பாஸ் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளாதது ஏன் என நடிகர் சரவணன் பதிலளித்துள்ளார். அதில், ‘பைனலில் கலந்துகொள்ளாதது தனக்கு ஒரு விஷயமே இல்லை’என்றார். மேலும், ‘பிக் பாஸ் குறித்து எங்கும், எதுவும் பேசக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக' கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தாண்டி என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் உள்ளன.

மேலும், இப்போது நான் தேனியில் மருத படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். கிழக்கு சீமையிலே போன்று இது அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். நான் அண்ணனாகவும், ராதிகா தங்கையாகவும் நடிக்கிறோம். பாரதிராஜாவின் உதவியாளர் தான் இயக்குகிறார்.இனி படங்களில் நடிப்பதில் மட்டும் தான் தீவிரமாக கவனம் செலுத்த உள்ளேன்", என சரவணன் அதிரடியாக பேசியுள்ளார்.

73036 total views