பிக்பாஸிற்கு பின் நடனப்பள்ளி குழுவுடன் சேர்ந்து மரண மாஸ் ஆட்டம் போட்ட சாண்டி.. வைரல் காட்சி..!

Report
427Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சிறந்த எண்ட்ர்டெய்னர் என்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடன இயக்குனரான சாண்டி. இவர் பிக்பாஸில் இறுதிவரை ரசிகர்களை மகிழ்வித்து ரன்னர் அப் இடத்தை பிடித்தார். என்னதான் முகேன் வெற்றிபெற்றாலும் சாண்டி இல்லாமல் பிக்பாஸ் வீடோ இல்லை அந்த அளவிற்கு தினம் தினம் வீட்டில் எண்ட்ர்டெய்னிங் செய்தார் சாண்டி.

இந்நிலையில் பிக்பாஸ் நிறைவடைந்த நிலையில் வெளியே வந்த சாண்டி தன் உயிராக நினைக்கும் மகளான லாலாவுடன் நிறை வீடியோவையும், புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டு வருகிறார். அண்மையில் நடிகர் சிம்புவையும் சந்தித்து கட்டிதழுவினார் சாண்டி.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே சாண்டி விஜய்யின் வெறித்தனம் பாடலுக்கு ஆட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது சாண்டி, லாலவுடனும், சாண்டியின் நடன பள்ளி குழுவுடன் சேர்ந்து வெறித்தனம் பாடலுக்கு மரணமாஸ் ஆட்டம் போட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் சாண்டி. இந்த நடன காட்சி சாண்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது..

15163 total views