மறைமுகமாக லாஸ்லியாவை கொஞ்சி வாழ்த்தினாரா கவின்?... என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க..!

Report
1582Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேனுக்கும் சாண்டிக்கும் கவின் அவரின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மறைமுகமாக லாஸ்லியாவை அவர் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது.

பிக்பாஸ் நிறைவடைந்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார்கள். அதை புகைப்படம் எடுத்தும் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் வெற்றி பெற்ற முகேனுக்கும் சாண்டிக்கும், கவின் வாழ்த்து தெரிவித்தார் அதில், "செல்லக்குட்டி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு மிகப் பெரிய பயணத்தின் ஆரம்பம் தான் இது. இன்னும் பெருசா, பெருசா, பெருசா வாங்க", என வாழ்த்தியுள்ளார்.

ஆனால் கவினின் இந்த பதிவு லாஸ்லியாவுக்கானது என ரசிகர்கள் நினைக்கின்றனர். லாஸ்லியாவின் படத்தை நீக்கிவிட்டு, கவின் மறைமுகமாக வாழ்த்தியுள்ளார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஆனால் அதற்கு கவின் எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

54883 total views