பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுக்கு செல்லும் அந்த 3 நபர்கள்.. இவர்கள் தான்..! வெளியான தகவல்

Report
6992Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் மக்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது.

இந்நிலையில், நேற்றைய எபிஷோடில், சேரன் மற்றும் லொஸ்லியாவை நாமினேஷனில் வெளியேற்றுவது போல காட்டி கடைசியில் சேரனை மட்டும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பினர்.

இந்நிலையில், கடந்த வாரம் நடத்தப்பட்ட கோல்டன் டிக்கெட் டாஸ்கில் சிறப்பான முறையில் விளையாடி கோல்டன் டிக்கெட் பெற்றிருக்கும் முகேன், இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்ட நிலையில், கவின், தர்ஷன், ஷெரீன், லொஸ்லியா, சாண்டி ஆகியோரில் இரண்டு பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல இருக்கிறார்கள்.

அவர்கள் யார்? என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பல முறை எலிமினேஷன் பட்டியலில் இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவோடு எஸ்கேப் ஆகி வரும் கவின், பல தவறுகளை செய்திருந்தாலும், நிகழ்ச்சிக்கு தேவையான கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளராகவும் அவர் இருப்பதால் அவரை இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்ய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், மற்றொரு இறுதிப் போட்டியாளராக தர்ஷன் அல்லது லொஸ்லியா இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இறுதியாக கவின், முகேன் மற்றும் லொஸ்லியா ஆகிய மூன்று பேர் தான் இறுதிப் போட்டிக்கு செல்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

loading...